காவலர்கள் குடும்பத்தினர் தர்ணா போராட்டம்

காவலர்கள் குடும்பத்தினர் தர்ணா போராட்டம்
X
திருப்புவனத்தில் கைது செய்யப்பட்ட காவலர்கள் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பகுதியை சேர்ந்த இளைஞர் அஜித்குமார் இறப்பு தொடர்பாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வு மாஜிஸ்திரேட் வேங்கட பிரசாத் தலைமையில் நடைபெற்றுது. இது தொடர்பாக ஆவணங்கள் அடுத்த கட்ட விசாரணைக்காக வழங்கப்பட்ட நிலையில், கொலை வழக்காக மாற்றப்பட்டு கொலை குற்றச்சாட்டில் தொடர்புடைய 5 போலீஸார் கைது செய்து 15.07.2025 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு மேலும் விசாரணைக்காக CBCID மாற்றப்பட்டது. இந்த சூழலில் காவலர் சங்கரபாண்டியன், ராஜா, பிரபு, கண்ணன், ஆனந்தன் ஆகியோரது கைது செய்யப்பட்டது தொடர்பாக காவலர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து திருப்புவனத்தில் முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் அஜித் மரணம் தொடர்பான வழக்குகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story