வெளி மாநில மது கடத்தியவர் கைது

X
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி கோபி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஆசனூர் சோதனை சாவடி பகுதியில் மேற்கொண்ட சோதனையில், ஈரோடு, வீரப்பன்சத்திரம், எம்.ஜி.ஆர். நகர் காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (46) என்பவர் கர்நாடக மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர் கடத்தி வந்த ரூ. 1,490 மதிப்பிலான 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.அதேபோல கர்கேகண்டி செக் போஸ்டில் நடத்திய சோதனையில் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் செங்கத்தரஹல்லி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30), புதுக்கோட்டை மாவட்டம், ஒடசேரி பட்டியைச் சேர்ந்த தவமணி (30) ஆகியோரும் கர்நாடக மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தி வந்த 6 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story

