சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு போக்சோ வழக்கு பதிவு

X
இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலும் பேஸ்புக், வாட்ஸ் -அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்கியுள்ளனர். இளம் பெண்கள் சிலர் சமூக வலைத்தளங்களால் பல்வேறு வகைகளில் தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 17 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது சம்பவம் குறித்த விவரம் வருமாறு ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது ஸ்மார்ட் போனில் சமூக வலைத்தளங்களில் ஈடுபாடுடன் இருந்துள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த கவின்குமார் (23) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். முதலில் சாதாரணமாக தொடங்கிய அவர்களது நட்பு பின்னர் நெருக்கமானது. கவின்குமார் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். பின்னர் கவின்குமார் சிறுமியை பார்ப்பதற்காக அடிக்கடி கொடுமுடி வந்து சென்றுள்ளார். அப்போது ஆசை வார்த்தை கூறி கவின்குமார் இந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததை கண்டுபிடித்த அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது, சிறுமி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து கொடுமுடி போலீசில் புகார் அளித்தனர். அதன் போலீசார் இது குறித்து விசாரித்த போது சிறுமியை கவின் குமார் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கவிக்குமார் மீது போக்சோ பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

