பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
X
பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம். ஒச்சந்தட்டு விஸ்வநாதபுரத்தை சேர்ந்த செல்வக்குமார்-முத்துலெட்சுமி ஆகியோரின் மகள் பிருந்தா. இவர் காளையார்கோவில் அருகே சூசையப்பர்பட்டிணத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு விடுதியில் தூக்கிட்ட நிலையில் இறந்துள்ளார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாணவியின் உடல் தற்போது சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story