காஞ்சிபுரத்தில் பைக் திருடிய இருவர் கைது

காஞ்சிபுரத்தில்  பைக் திருடிய இருவர் கைது
X
காஞ்சிபுரம் அருகே பைக் திருடிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு
காஞ்சிபுரம் அடுத்த, சிறுகாவேரிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 60; இவர், தன்னுடைய 'ஹோண்டா டியோ' பைக்கை, கடந்த 19ம் தேதியன்று காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் இருக்கும் தனியார் நகைக்கடை அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். குமார் அளித்த புகாரின்படி, சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த தீனாபவன், 29. விக்னேஷ், 19, ஆகிய இருவரும் பைக்கை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
Next Story