அரசு கலை அறிவயல் கல்லூரியில் ஒருவார அறிமுக பயிற்சி திட்ட ஆலோசனை முகாம்

அரசு கலை அறிவயல் கல்லூரியில் ஒருவார அறிமுக பயிற்சி திட்ட ஆலோசனை முகாம்
X
குமாரபாளையம் அரசு கலை அறிவயல் கல்லூரியில் ஒருவார அறிமுக பயிற்சி திட்ட ஆலோசனை முகாம் நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை, அறிவயல் கல்லூரியில் ஒரு வார அறிமுக பயிற்சி திட்ட ஆலோசனை முகாம் முதல்வர் சரவணாதேவி தலைமையில் நடந்தது. பேராசிரியர் ரகுபதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது: தமிழக அரசு சார்பில், அரசு கல்லூரிகளுக்கு, மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி, கல்வி பயில ஊக்குவித்து வருகின்றனர். மாணவ, மாணவியர் இதனை பயன்படுத்தி நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும். விசைத்தறி தொழில் மிகுந்த குமாரபாளையம் நகரில், விசைத்தறி மற்றும் இதர தொழில் செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகள், கல்லூரி கல்வி பயில, இந்த கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை, கல்வி போதிக்கும் ஆசிரிய பெருமக்களை மதிக்க வேண்டும், அப்படிப்பட்ட மாணவர்கள் வாழ்வில் சிறந்த நிலையை அடைவார்கள். எடுத்துக்கொண்ட குறிக்கோளில் முனைப்புடன் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். லட்சியத்துடன் வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்த்துறை தலைவர் முரளிதரன், மாணவர் பேரவை துணை தலைவர் கார்த்திகேயனி உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story