அரசு சட்டக் கல்லூரியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

X
NAMAKKAL KING 24X7 B |1 July 2025 6:15 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, அரசு சட்டக்கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுரை.
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, பல்வேறு திட்டப்பணிகள் குறித்து, நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.92.31 கோடி மதிப்பீட்டில் அரசு சட்டக்கல்லூரிக்கான புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, அரசு சட்டக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, நாமக்கல் மாநகராட்சி கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவினை ருசித்து பார்த்து, உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார். மேலும் சமயலறை, கழிப்பறை ஆகியவற்றினை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சி கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியினை பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் விபரம், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிக்சைகள், மருந்து பொருட்களின் இருப்பு ஆகியவற்றை கேட்டறிந்து, சுற்றுப்புறத்தினை தூய்மையாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் புற நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பேருந்துகளின் வருகை விபரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், தூய்மையாளர்களிடம் சுற்றுப்புறம் மற்றும் கழிப்பறையினை தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார்.
Next Story
