மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பள்ளிக் கல்வித் துறையில் நடைபாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடத்துவதற்கான உடனடியாக அறிவிப்பு அட்டவணையும் வெளியிட வேண்டும், அரசுப் பள்ளிகளுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கும் அனைத்து நலத்திட்டங்களை உரிமைகளும் அரசு உதவி பெறும் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் முதுகலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு களைதல் ,உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ மற்றும் STFI வைத்துள்ள கோரிக்கையை தமிழரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் மாநில பொதுச் செயலாளர் அன்பழகன், மாவட்ட தலைவர் வெத்தணக்குமார், மாநில துணைத் தலைவர் முருகபாரதி,மாவட்டத் துணைத் தலைவர்கள் பொட்டியம்மான்,பரமன், ஐனனி,மாநில பொதுக்குழு உறுப்பினர் லதா மாவட்ட செயலாளர் செல்வம் மாவட்ட அமைப்புச் செயலாளர் கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story