சுற்றித் திரியும் ஒற்றைக் காட்டு யானை

X
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கொடைக்கானல் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் மனோரஞ்சிதம் நீர்த்தேக்க பகுதியில் கடந்த சில நாட்களாகவே யானை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.. மேலும் பேரிஜம் வனப்பகுதிக்குள் இருந்து இடம் பெயர்ந்த காட்டு யானைகள் நீர் தேக்கப் பகுதியில் சுற்றித் திரிகின்றனர் இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சுற்றுலா தளங்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இந்நிலையில் இன்று மீண்டும் அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள் மீண்டும் நீர் தேக்கப்குதிக்கு வந்ததால் நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள அப்சர்வேட்டரி புதுக்காடு பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர் எனவே அடிக்கடி மக்கள் பயன்படுத்தும் நகரை ஒட்டிய பகுதிக்குள் வரும் யானையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

