உயர்கல்வி வழிகாட்டல் தொடர்பான மாணவ, மாணவியர் குறைதீர் கூட்டம்

X
அரியலூர், ஜூலை 1- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, மாணவ, மாணவிகளின் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். மேலும், அனைத்து பள்ளிகளிலும் உள்ள நஸ்ரீட்ர்ர்ப் கர்ஞ்ண்ய்-இல் ஏங நன்ழ்ஸ்ங்ஹ் அல்ல்}இல் மாணாக்கர்களின் உயர்கல்வி சேர்க்கை குறித்த சரியான தகவலை அனைத்து வகுப்பு ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு தலைமையாசிரியர்களின் மேற்பார்வையில் உஙஐந டர்ழ்ற்ஹப்}இல் பதிவேற்றம் செய்திடுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2 ஆவது தளம், அறை எண்.201}ல் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றும், இக்கட்டுப்பாட்டு அறை சேவை மையத்தினை அலுவலக வேலை நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் வருகை புரிந்தோ அல்லது 84388 50550 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்தார்.கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) பாலசுப்ரமணியன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கெüசர், உதவி திட்ட அலுவலர் சக்கரவர்த்தி மற்றும் பள்ளிக்கல்வி துறை அலுவலர்கள், அனைத்து உயர்கல்வி துறை தலைமை அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

