ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு..

X
Rasipuram King 24x7 |1 July 2025 7:04 PM ISTராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் 2025 -26 ஆம் கல்வியாண்டில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்கான அறிமுக ஒருவாரகால பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை துவங்கியது. இந்த ஒரு வார பயிற்சி திட்டத்திற்கு தமிழக அரசின் தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகள் குறித்தும் கல்லூரியில் மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் குறித்தும் மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்வதற்காக கல்லூரியில் இருக்கும் விளையாட்டு வசதிகள், என்சிசி, என்எஸ்எஸ், ஒய்ஆர்சி போன்ற பல்வேறு அமைப்புகள் குறித்தும் மனித உரிமைகள், பொது சுகாதாரம், ஒழுக்கம், கட்டுப்பாடு குறித்தும் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதையடுத்து இந்த ஒரு வாரகால பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) இரா.சிவக்குமார் தலைமை வகித்துப் பேசினார். இயற்பியல் துறை தலைவர் எம் கே சுப்பிரமணியம் வரவேற்றார். நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் குறித்து சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஆர்.ஐஸ்வரியா பேசினார். கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர் சி.நாகூர்செல்வம் கல்லூரியில் உள்ள பல்வேறு பாடப் பிரிவுகள், பல்வேறு அமைப்புகள், கல்லூரியின் தரம் போன்றவை குறித்தும் பேசினார். ஆங்கில துறைத் தலைவர் பெ.மைதிலி, வேதியியல் துறை தலைவர் பி.சண்முகசுந்தரம், கணினி அறிவியல் துறை தலைவர் சுரேஷ்பாபு, தாவரவியல் துறை தலைவர் செங்கோட்டுவேல், விலங்கியல் துறைத் தலைவர் சேகர் உள்ளிட்ட பல்வேறு துறைத் தலைவர்களும் தங்கள் துறை பற்றி உரை நிகழ்த்தினர். இறுதியில் பொது நிர்வாக துறை தலைவர் பா.குருசாமி நன்றி கூறினார்.
Next Story
