ஊராட்சி மன்ற தலைவர் விஷம் குடித்து உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 54 நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (60). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் மன்னார்குடி கம்மாளர் தெருவில் உள்ள தனியார் வங்கியில் (எக்வடாஸ்) தனது கடை பயன்பாட்டுக்காக கடன் வாங்கி இருந்தார். இந்த சூழலில் கடன் தவணைத் தொகையை சரிவர திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி தனியார் வங்கி ஊழியர்கள் இருவர் நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் கணேசனின் வீட்டுக்கு வந்து கடனை திருப்பி செலுத்தும் படி வங்கி ஊழியர்கள் சத்தமாக பேசிவிட்டு சென்றனர் . மேலும் மாலை திரும்பி வருகிறோம் பணத்தை செலுத்துங்கள் எனவும் கூறிவிட்டு சென்றனர். இதனால் மன உளைச்சல் அடைந்த ஜெகதீசன் மன்னார்குடிக்கு பொருட்கள் வாங்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்லே மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மயங்கிய நிலையில் முதியவர் கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பெயரில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் மீட்டுச் சென்ற போலீசார், அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவரது உடல் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனது தந்தையின் சாவுக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மகன் அபிஷேக் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

