நாமக்கல் மாநகராட்சி தூய்மை காவலர்களுக்கு விருந்து வைத்து அசத்திய நாமக்கல் முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் !
Namakkal King 24x7 |1 July 2025 7:38 PM ISTநாமக்கல் மாநகராட்சியில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு விருந்து அளித்து சிறப்பு செய்தார்.
நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சியில் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்களை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திசெல்வன், பொன்னாடை அணிவித்து- பரிசுகள் வழங்கி கௌரவித்தார். 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு விருந்து அளித்து சிறப்பு செய்தார். நாமக்கல் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 9 பேர் ஒரே நாளில் ஓய்வு பெற்றனர். இதனை அடுத்து பணி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் மற்றும் தற்போது பணியில் உள்ள தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு சிறப்பு செய்யும் வகையில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ.காந்திசெல்வன், பாராட்டு நிகழ்ச்சி, நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடத்தினார். இதில், நாமக்கல் மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 9 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசு பொருட்கள் வழங்கி, தமது குடும்பத்தினருடன் பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ. காந்திசெல்வன், தூய்மை பணியாளர்கள் தான் நமது நாட்டின் தூய்மை காவலர்களாக விளங்குகின்றனர். நமது பகுதிகளை தூய்மையாக வைத்திருக்கும் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தூய்மையான பாரதத்தை உருவாக்கும் தூய்மை பணியாளர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும், அனைவரும் தங்கள் வீடுகள் அலுவலகங்களில் சேகரமாகும் குப்பைகளை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்றும் இதன் மூலம் பொது சுகாதாரம் மேம்படும் என்றும் கேட்டுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாநகராட்சியில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு விருந்து அளித்து சிறப்பு செய்தார்.இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாநகராட்சி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் அவரது குடும்பத்தினர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story


