ஆன்லைன் உணவு புக்கிங் நோ டெலிவரி.. நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்களின் அதிரடி முடிவு அமுலுக்கு வந்தது!

ஆன்லைன் உணவு புக்கிங் நோ டெலிவரி.. நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்களின் அதிரடி முடிவு அமுலுக்கு வந்தது!
X
நாமக்கல் நகர ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்களிடம் ஸ்விக்கி மற்றும் சொமோட்டோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில் கமிஷன் தொகையை குறைப்பது மற்றும் மறைமுக கட்டணத்தை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
நாமக்கல்லில்,கூடுதல் கமிஷன் வசூலிக்கும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு,நாமக்கல் தாலுக்கா மற்றும் மாநகர ஹோட்டல் உரிமையாளர்கள், ஜூலை 1 முதல் உணவு வினியோகம் நிறுத்தம் செய்துள்ளனர்.நாமக்கல் மாநகரில் 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் ஒவ்வொரு உணவகத்திற்கும் ஏற்ப கமிஷனில் வேறுபாடு வைத்து உள்ளனர். மேலும் விளம்பர கட்டணம், மறைமுக கட்டணம் போன்றவற்றால் வருமானத்தில் 50 சதவீதம் பாதிப்பு ஏற்படுவதாக கூறி,
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு,(01.07.2025) முதல், உணவு வழங்காமல் நிறுத்தி வைக்க இருப்பதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த வாரம் அறிவித்து இருந்தனர்.இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் நாமக்கல் நகர ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில் கமிஷன் தொகையை குறைப்பது மற்றும் மறைமுக கட்டணத்தை நிறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆனால் ஓட்டல் உரிமையாளர்கள் வைக்கும் கோரிக் கையை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் ஏற்க மறுத்து விட்டன. எனவே திட்டமிட்டபடி இன்று முதல் நாமக்கல் மாநகரில் கூடுதல் கமிஷன் வசூலிக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு உணவு வழங்கப்படவில்லை.இதனால் ஆன்லைனில் உணவு விநியோகிக்கும் பணியாளர்கள் ஹோட்டல் கடைகளில் முன்பு காத்திருந்தனர்.இதுகுறித்து நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் கூறும்போது, ஆன்லைன் உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களின் கமிஷன் தொகை அதிகமாகவும், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு விலை கட்டுபடியாகாமல் இருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் செலவாகிறது. தொடர்ந்து அந்த நிறுவனங்களோடு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்கள். தமிழகம் முழுவதும் எப்போதும் போல வாடிக்கையாளர்கள் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் எனவும் ஓட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Next Story