பேராவூரணி அருகே திமுக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் 

பொதுக்கூட்டம்
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி - சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில், முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் அரசின், நாடு போற்றும் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பிரச்சாரப் பொதுக்கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் கடைவீதியில், திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.  சேதுபாவாசத்திரம் திமுக ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்  கோ.முருகேசன் வரவேற்றார்.  இதில், தஞ்சை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் டி.பழனிவேலு, தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினருமான நா.அசோக்குமார்,  தலைமைக் கழக பேச்சாளர்கள் மெட்ரோ டி.சேகர், வெ.பூர்ணிமா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டாக்டர் எஸ்.ஆர்.சந்திரசேகரன், ஆர்.அரவிந்த், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் இரா.இராஜரெத்தினம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் குழ.செ.அருள்நம்பி, மாவட்ட துணைச்செயலாளர் மைக்கேலம்மாள் ஞானப்பிரகாசம், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத் மற்றும் மாவட்டக் கழக, ஒன்றிய, ஒன்றியக்கழக, ஒன்றிய, பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் க.முகிலன் நன்றி கூறினார்.
Next Story