தமிழ் மண்ணையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேட்டி

தமிழ் மண்ணையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேட்டி
X
தமிழ் மண்ணையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேட்டியளித்தார்
அரியலூர், ஜூலை.2- தமிழ் மண்ணையும், மானத்தையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றார் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், திமுக அரியலூர் மாவட்டச் செயலருமான சா.சி.சிவசங்கர். அரியலூரிலுள்ள திமுக அலுவலகத்தில்,செவ்வாய்க்கிழமை மாலை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு ஒவ்வொரு முறையும் பல்வேறு சதி பின்னல்களை சந்தித்து வருகிறது. ஆனால் அவற்றை எல்லாம் ஓரணியில் திரண்டு நின்று எதிர்கொள்கின்ற காரணத்தினால் தான் வெற்றி பெற்று வருகின்றோம். 83 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு ஒரணியில் நின்ற காரணத்தினால் ஹிந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டு, நம்முடைய தாய் தமிழ்மொழி காற்றப்பட்டு தற்போது மொழி அந்தஸ்து உயர்ந்திருக்கின்றது. தற்போது மகாராஷ்ரா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க முயன்ற நேரத்தில் அம்மாநில எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து அதை ஏற்கமாட்டோம் என்று எதிர்ப்பு கொடுத்த காரணத்தினால், பாஜக அரசு மொழி திணிப்பில் இருந்து பின்வாங்கி இருக்கிறது. நாம் முன்னெடுத்த வழியில் தான் மகாராஷ்ரா மாநிலம் வருகிறது என்பதை காட்டுகிறது. தென்மாநிலங்களில் தங்களுடைய தாய்மொழியை அவசியம் படிக்க வேண்டும் என்று சட்ட திருத்தத்தை கொண்டு வருகின்றனர்.இரு மொழி கொள்கை அண்ணா கொண்டு வந்த நேரத்தில், அதை கேலி கிண்டல் செய்தவர்கள் எல்லாம் அவருடைய உண்மை தத்துவத்தை, அதனுடைய வீரியத்தை, அதனால் கிடைத்திருக்கின்ற பலனை இப்பொழுது உணர்ந்திருக்கின்றார்கள். எனவே ஹிந்தி திணிப்பு மாத்திரமல்லா தங்களுடைய பாசிச எண்ணங்களை திணிப்பதற்கு மத்திய பாஜக கொண்டு வரும் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் உரிமைகளை பறிப்பதாக அமைகிறது. தமிழகத்துக்கு கல்விக்காக தரவேண்டிய நிதியை தரமாமல் மும்மொழி கொள்கை, தேசியக் கல்விக் கொள்கை ஏற்றுக்கொண்டால் தான் நிதியை வழங்குவதாக மத்திய மனித வளத்துறை அமைச்சரே வெளிப்படையாக சொல்கிறார். இதே போல் மத உரிமைகளை பறிக்கின்ற வகையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஒரு பக்கம் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே தான், இவற்றையெல்லாம் நாம் எதிர்த்து நின்று குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.ஆனால், அதிமுகவோ திராவிடக் கொள்கைக்கு எதிராக இருக்கக் கூடியவர்களுக்கு மேடையை அமைத்துக் கொடுக்க வேண்டிய ஒரு கால நெருக்கடியில் இருக்கின்றார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வாய்மூடி மௌனமாக அவர்களோடு உட்காந்திருக்கின்ற காட்சியை பார்க்க முடிகிறது. கீழடி நாகரிகம் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை அறிவில் பூர்வமாக நிரூபித்த போதிலும் அதனைக் கூட மத்திய பாஜக அரசு அங்கீகரிக்க முன்வரவில்லை. எனவே எல்லா விதத்திலும் மண்ணையும் தமிழ் மொழியையும் காக்க நாம் போராடி கொண்டு இருக்கிறோம். அந்தப் போராட்டத்தில் எல்லோரையும் ஒருங்கிணைக்கின்ற மிக முக்கியமான நிகழ்வு தான் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார். இந்த பரப்புரை மாநிலத்தினுடைய மானத்தை, மொழியை, மண்ணை காக்கின்ற முன்னெடுப்பு .இதுவே தேர்தலுக்கான முன்னேடுப்பாகவும் அமையும் .காரணம் முருகன் என்ற பெயரிலே, ஆன்மீக மாநாடு என்ற பெயரிலே அவர்கள் அரசியல் செய்கின்ற பொழுது ,அவர்களுக்கு எதிர் அரசியல் செய்ய வேண்டிய காலத்தில் நாம் இருக்கின்றோம் எனவே இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு தேர்தலுக்கான நகர்வாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றார். பேட்டியின் ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன், கட்சியின் சட்டத் திருத்தக் குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். :
Next Story