கே. ஆலங்குளத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தம்பதி தற்கொலை

கே. ஆலங்குளத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தம்பதி தற்கொலை
X
பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தம்பதி தற்கொலை
தென்காசி மாவட்டம், குருவிகுளம் அருகேயுள்ள கே. ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (67). பால் வியாபாரி. மனைவி மகாலட்சுமி (57). இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். இருவரும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனா். வேலுச்சாமியின் மனைவி மகாலட்சுமிக்கு சா்க்கரை நோய் இருந்து வந்ததாம். இதனால் மகாலட்சுமியின் காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மன வேதனை அடைந்த இருவரும் திங்கள்கிழமை வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனராம். இதையறிந்த உறவினா்கள் இருவரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு திங்கள்கிழமை வேலுச்சாமி இறந்தாா்.அவரது மனைவி மகாலட்சுமி இறந்தாா். இதுகுறித்து குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Next Story