கோவை: உணவுப் பாதுகாப்பு அதிகாரி லஞ்சம் கேட்பதாக புகார்

கோவை: உணவுப் பாதுகாப்பு அதிகாரி லஞ்சம் கேட்பதாக புகார்
X
கோவையில் உணவு பாதுகாப்பு அதிகாரி சிறு கடைகளில் மிரட்டி லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
சரவணம்பட்டியில் பணியாற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகாரி சக்திவேல், சிறு கடைகளிடம் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடைக்காரர் விஜயனிடம் ரூ.10,000 கேட்டு, மறுத்ததால் மிரட்டியதாகவும், பின்னர் ரூ.2,000 அபராதம் விதித்து ரசீது இல்லாமல் ஜி பேயில் அனுப்ப சொல்லி பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சி.சி.டி.வி. மற்றும் ஆடியோ வெளியான நிலையில், வணிகர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று புகார் மனு கொடுத்துள்ளது. தற்போதைய சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story