பாலவிடுதி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்ற நான்கு பேர் கைது

X
பாலவிடுதி பகுதியில் நான்கு பேர் கைது பாலவிடுதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நல்லூரான்பட்டி, மோளப்பட்டி அரச கவுண்டனூர், கார்ணம் பட்டி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் மது விற்ற மருதமுத்து, சுரேஷ், விஜி,மருதமுத்து ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 111 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
Next Story

