கோவை: ரயில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்- துரை வைகோ

X
கோவை விமான நிலையத்தில் நேற்று பேசிய ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் துரை வைகோ, ரயில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்; மூத்த குடிமக்களுக்கு பயண சலுகைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும் என்றும், குறைந்தபட்ச அங்கீகாரம் வேண்டும் என்பது தங்களது விருப்பம் என்றும் தெரிவித்தார். மூன்றாவது மொழி இந்திய மொழியாக கட்டாயமாக்குவது ஹிந்தி திணிப்பாகும் என விமர்சித்த அவர், ஆங்கிலம் உலக தொடர்பு மொழி என்பதால் அதை தவிர்க்க முடியாது என்றும் கூறினார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு ஒன்றிய அரசு கொண்டுவர வேண்டும் எனக் கூறினார்.
Next Story

