கோவை: மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாட்டம்– பொதுமக்கள் அச்சம்

கோவை: மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாட்டம்– பொதுமக்கள் அச்சம்
X
கோவில்பாளையம் பகுதிகளில் நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆயுதங்களோடு சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சம்.
கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பபாளையம் வையாபுரி நகர் பகுதியில், கடந்த 2 நாட்களாக நள்ளிரவில் கம்பு, பேட்டரி டார்ச் போன்றவற்றுடன் மர்ம நபர்கள் வீடு வீடாக சுற்றித் திரியும் காட்சிகள் சி.சி.டி.விகளில் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story