கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
X
காரைக்குடியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனி வாசலில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டுவண்டி பங்கேற்றன. பெரிய மாடு, கரிச்சான் மாடு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்ணயம் செய்த தூரம் வரை போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும், சாரதிக்கும் ரொக்க பரிசும், நினைவுக் கோப்பையும் வழங்கப்பட்டது. சாலையின் இரு புறமும் ஏராளமான பொதுமக்கள், ரசிகர்கள் நின்று கண்டு களித்தனர்
Next Story