திருப்புவனத்தில் மீண்டும் மீண்டும் திருட்டு

X
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் விசாரணை கைதி அஜித் குமார் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திருப்புவனம் குற்றப்பிரிவு போலீசார் பிரபு, ஆனந்தன், கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தீஷ், சிவகங்கை மாவட்டத்துக்கு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் லாக்அப் மரண வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், திருப்புவனம் கோயிலில் மீண்டும் திருட்டு புகார் எழுந்துள்ளது. கோயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பை மற்றும் ஸ்பீக்கர் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருட்டு புகாரில்தான் இளைஞர் அஜித்குமார் போலீசாரால்தாக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அப்பகுதியில் திருட்டு புகார் வந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மூன்று பேர் அறநிலையத்துறையில் திருட்டு புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
Next Story

