பொறியியல் பணிகள் காரணமாக தாமதமாக செல்லும் ரயில்கள்

பொறியியல் பணிகள் காரணமாக தாமதமாக செல்லும் ரயில்கள்
X
பொறியியல் பணிகள் காரணமாக, சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூா் - திருச்சி சோழன் அதிவிரைவு ரயிலானது (22675) வரும் 5, 6, 7-ஆம் தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 30 நிமிஷங்கள் நின்று தாமதமாகச் செல்லும். மதுரை - கச்சிகுடா சிறப்பு ரயிலானது (07192) வரும் 2-ஆம் தேதி 80 நிமிஷங்கள் தாமதமாக காலை 10.40 மணிக்குப் பதிலாக நண்பகல் 12 மணிக்குப் புறப்படும். ராமேசுவரம் - சாா்லப்பள்ளி சிறப்பு ரயிலானது (07696) வரும் 4-ஆம் தேதி 9.50 மணி நேரம் தாமதமாக காலை 9.10 மணிக்குப் பதிலாக இரவு 7 மணிக்குப் புறப்படும்.
Next Story