ஆற்காட்டில் வட்டார கல்வி அலுவலருடன் ஆசிரியர்கள் சந்திப்பு!

X
ஆற்காடு ஒன்றிய வட்டார கல்வி அலுவலராக உமா என்பவர் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். அவரை வட்டார கல்வி அலுவலர் ராஜா, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெ.சரவணன் தலைமையில் ஆசிரியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, மாவட்டத்தின் கல்வி முன்னேற்றம் குறித்தும் கல்விப்பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ச.விஜயலட்சுமி, ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கி.வைத்தியநாதன், மாவட்ட மகளிர் அணி தலைவி ரா.சி.வாசவி, மாவட்ட பொருளாளர் டி.வசந்தி, மாவட்ட செயலாளர் சு.அருள்மொழி, ஆற்காடு ஒன்றிய வட்டார மகளிர் அணி தலைவி கோ.பிரேமலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

