சோளிங்கர்:விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய ஊராட்சி மன்றதலைவர்

X
சோளிங்கர் அடுத்த மேலேரி, அகவலம், குன்னத்தூர், காவேரிபுரம், நெமிலி, ஈச்சன்தாங்கல், உளியநல்லூர், நெமிலி எம்.ஜி.ஆர். நகர், புன்னை, வெண்பாக்கம், சிறுகரும்பூர், சிறுவளையம், பிள்ளையார் குப்பம், புதுபட்டு, கரியாக்குடல், பெரிய காவேரிப்பாக்கம், பாலகிருஷ்ணபுரம், களவலூர், புதுப்பாளை யம், கன்னிகாபுரம், புதுப்பட்டு உள்ளிட்ட 22-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடு வதற்கான கிரிக்கெட் பேட், பந்து மற்றும் வாலிபால் உள்ளிட்ட உபகரணங்களை கேட்டு வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமியிடம் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், ஊக்குவிக்கும் வகையிலும் வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி 22 கிராமங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட், பந்து, வாலிபால் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட இளைஞர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story

