ஆற்காடு அருகே மணல் கடத்திய வேன்கள் பறிமுதல்

X
ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா உத்தரவின்பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆற்காடு அருகே பாலாற்றிலிருந்து வேனில் மணல் கடத்தி வந்த புதுப்பாடி பகுதியை சேர்ந்த அஜித்குமாரை (வயது 27) கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல் ஆற்காடு சக்கரமல்லூர் பகுதியில் தாசில்தார் மகாலட்சுமி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலாற்றில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வேன்களை பறிமுதல் செய்து ஆற்காடு தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
Next Story

