வாலாஜாபேட்டையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

வாலாஜாபேட்டையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
X
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வாலாஜாபேட்டை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் கோர்ட்டுக்கு வரும் பொதுமக்கள் தண்ணீரின்றி சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். இன்றும் கோர்ட்டு பணிகளை புறக்கணிக்கின்றனர்.
Next Story