கோவை: மூதாட்டிக்கு நிதி உதவி வழங்கிய எம்.எல்.ஏ ஜெயராம்!

கோவை: மூதாட்டிக்கு நிதி உதவி வழங்கிய எம்.எல்.ஏ ஜெயராம்!
X
கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த 78 வயதான தங்கமணி மூதாட்டி, பழைய செல்லாத நோட்டுக்களை மாற்றி தர ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, எம்எல்ஏ ஜெயராமன் நிதி கொடுத்து உதவி இருக்கிறார்.
கோவை உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த 78 வயதான தங்கமணி மூதாட்டி, பழைய செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மாற்றிக் கொடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அரசிடம் இருந்து உதவி கிடைக்கவில்லை என மனவேதனை கூறிய மூதாட்டியின் நிலையை கவனித்து உடனடி நடவடிக்கை எடுத்து, 15000 வரை பணம் மாற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில், அ.தி.மு.க. சிங்கநல்லூர் எம்.எல்.ஏ கே.ஆர். ஜெயராம் நேற்று நேரில் சென்று மூதாட்டிக்கு ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.15,000 என்ற வழங்கினார். அவரது மனிதநேய செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
Next Story