குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் ஏலம்

X
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 3 சக்கர வாகனங்களின் பொது ஏலம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. ராணிப்பேட்டை எஸ்பி விவேகானந்த சுக்லா தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் ஏராளமானோர் பங்கேற்று வாகனங்களை ஏலத்தில் எடுத்தனர். இதில் 52 இருசக்கர மற்றும் 1 மூன்று சக்கர வாகனங்கள் மொத்தமாக ரூ.2 லட் சத்து 58 ஆயிரத்து 184-க்கு ஏலம் விடப்பட்டன. ஏலம் விடும் நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி குணசேகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story

