காவேரிப்பாக்கம் :லாரிகளில் மணலை மூடாமல் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி!

X
காவேரிப்பாக்கம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் ஜல்லி, எம்.சாண்ட் மணல், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் லாரி, டிராக்டர்களில் எடுத்து செல்லப்படுகின்றன. இவ்வாறு ஏற்றி செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்கின்றன. இதனால் மணல் துகள்கள் காற்றில் பறந்து சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்களில் விழும் நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகள், டிராக்டர்கள் தார்ப்போய் கொண்டு மூடி செல் வதை உறுதி செய்வதோடு அதிக வேகத்தில் செல்லும் வாக னங்களை சம்பத்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாக கண்கா ணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

