அத்திக்கடவு வனத்தில் மான் என நினைத்து இளைஞர் சுட்டுக்கொலை – தாய்மாமா, தாத்தா பரபரப்பான வாக்குமூலம்!

X
அத்திக்கடவு வனப்பகுதியில் மான் வேட்டைக்கு சென்ற மூவரில் சஞ்ஜித் (23) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். கைது செய்யப்பட்ட உறவினர்கள் முருகேசன் மற்றும் பாப்பையன் போலீசுக்கு அளித்த பரபரப்பான வாக்குமூலத்தில், மான் என நினைத்து சப்தம் செய்த சஞ்ஜித்தை தவறுதலாக சுட்டுவிட்டோம் என தெரிவித்துள்ளனர். சடலத்தை வனப்பகுதியில் விட்டுவிட்டு மோட்டார் பைக்கில் தப்பிய இருவரும் வெள்ளியங்காட்டில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர். நாட்டுத் துப்பாக்கி, பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் ஏற்கனவே சந்தன மரம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

