ஊருக்குள் புகுந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்

X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை மற்றும் புலிகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு ,காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.இந்நிலையில்ஆசனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஓங்கல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவசாமி (40). இவர் 10 மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் தனது வீட்டின் முன் இருந்த கொட்டகையில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு தூங்க சென்ற விட்டார். இன்று காலை எழுந்து பார்த்த போது தனது கன்று குட்டி ஒன்று மாயமாகி இருந்தது. அதனை தேடிய போது மாட்டு கொட்டகையில் இருந்து சிறிது தூரத்தில் பாதி உடல் தின்ற நிலையில் கன்று குட்டி இறந்து கிடந்தது.இது பற்றி ஆசனூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது கன்று குட்டியை சிறுத்தை கடித்து கொன்றது தெரிய வந்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, கடந்த 1 மாதத்தில் மட்டும் அரேபாளையம் ,ஒங்கல்வாடி கிராமத்தில் 5 மாடுகள் 10 கோழிகள், 5 காவல்நாய்களை சிறுத்தை கடித்து கொன்றுள்ளது. ஊருக்குள் புகுந்து தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க படவில்லை. கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி ருசித்து பழகிய சிறுத்தை தினந்தோறும் ஊருக்குள் புகுந்து வேட்டையாடி வருகிறது. மனிதர்களை தாக்கு முன் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என மலைகிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

