மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் ஆய்வு!

X
மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை (Kit Inspection) பார்வையிட்டும், அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார். மேலும் காவல் நிலைய போலீசாரிடம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை (Reception Slip) வரவேற்பாளர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுபகுமார் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
Next Story

