கோவை: பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய தேவை திமுகவுக்கு இல்லை - செந்தில் பாலாஜி பேட்டி !

X
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க பா.ஜ.க-வை எதிர்த்து அரசியல் செய்யவில்லை என்றும், அவர்கள் செய்யாததை மக்களுக்கு தெரிவிப்பதே திமுகவின் பணி என்றும் கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளில், கோவையில் எதிர்க்கட்சிகள் வென்றிருந்தாலும், முதல்வர் மாநிலத் திட்டங்களை கோவை மக்களுக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார். ஜூலை 3ம் தேதி கோவையில் 317 பூத்துகளில் வீடு வீடாக பிரச்சாரம் நடைபெறும் என்றும், 10 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் நடைபெற்று வருவதாகவும் கூறினார். TVK கட்சியின் வளர்ச்சி குறித்து எழுந்த கேள்விக்கு, மகளிர், இளைஞர்கள் என அனைவரும் திமுகவின் பின்னால்தான் உள்ளனர் என்றார். அ.தி.மு.க கூட்டணி அமைத்ததைக் கடுமையாக விமர்சித்த அவர், முன்னால் திட்டிய கூட்டணியில்தான் இன்று இருக்கிறார்கள். பக்கத்தில் மிச்சர் வைத்திருந்தால் சாப்பிட்டிருப்பார்கள் என பழி சுமத்தினார். நீட் தேர்வு, சமையல் எரிவாயு மானியம், கீழடி உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசு செய்யும் துரோகம் குறித்து விமர்சித்தார். தேர்தல் முடிவில் திமுகவின் வெற்றி உறுதி என்றும், கோவை திமுகவின் கோட்டையாக இருப்பதை மக்கள் மீண்டும் நிரூபிக்க உள்ளார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Next Story

