அரக்கோணத்தில் இரவு ரோந்து பணி மேற்கொள்ள எஸ் பி உத்தரவு!

X
அரக்கோணம் காவல் உட்கோட்டத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் இரவு பனப்பாக்கம் பகுதியில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 6 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் மாவட்டத் தில் குற்ற சம்பவங்களை தடுக்க தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா போலீசாருக்கு உத்தரவிட்டார்.அதன் பேரில் அரக்கோணம் துணை எஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் அரக்கோணம் காவல் உட்கோட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா கடை வீதிகள், முக்கிய சந்திப்புகளில் இரவு நேர ரோந்து பணி, வாகன தணிக்கை முறையாக நடக்கி றதா? என்பதை திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது அரக்கோணம் பகுதியில் ரோந்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம், குற்றச்செயல்கள் நடைபெறாத வகையில் மிகுந்த விழிப்புடன் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
Next Story

