சிற்றணை பகுதிக்கு செல்வதற்கு தடை

சிற்றணை பகுதிக்கு செல்வதற்கு தடை
X
மதுரை மாவட்டம் குருவித்துறை பகுதியில் உள்ள சிற்றணை பகுதிக்கு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் குருவித்துறை சித்தாதிபுரம் சிற்றனை பகுதிக்கு செல்ல ஏற்கனவே தடை உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் சிலர் கூமாப்பாட்டிக்கு மாற்றாக குருவித்துறையென ட்ரெண்ட் செய்ததால் எச்சரிக்கையை மீறி பலரும் வந்து செல்கின்றனர். இந்த பாண்டியர் கால சிற்றணை இயற்கை எழில் கொஞ்சும் அழகிய பகுதிதான் எனினும், இன்னும் அடிப்படை வசதிகள் ஏதும் ஏற்படுத்தப்படாத நிலையில், பாதுகாப்பு குறைபாடுகளும் பல உள்ளது.ஆனால் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவோர் அளந்து விடுவதால், உண்மை நிலை தெரியாமல் பல பகுதிகளிலிருந்து வரும் மக்கள் சிரமமடைகின்றனர். நீர்வளத்துறை வெறும் எச்சரிக்கை பலகையை மட்டும் வைக்கமால், சிற்றணை சாலையில் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story