திருப்புவனத்தில் விசாரணை துவக்கிய நீதிபதி

திருப்புவனத்தில் விசாரணை துவக்கிய நீதிபதி
X
திருப்புவனத்தில் இளைஞர் உயிரிழந்த வழக்கை நீதிபதி விசாரிக்க துவக்கினார்
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் நகை திருட்டு தொடர்பாக கோவில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால் தாக்கப்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. மேலும் காவல்துறையினர் அஜித்குமாரை தாக்கும் வீடியோ காட்சியும் வெளியானது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் காவல்துறையினரிடமும், அரசிடமும் சரமாரியான கேள்விகளை முன்வைத்து வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தரால் சுரேஷ் விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இன்று திருப்புவனம் பகுதியில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்
Next Story