ஜெயமங்களம் பகுதியில் பெட்டிக்கடையில் மது விற்ற பெண் கைது

X
தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமாக நேற்று ஜெயமங்கலம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது சீனியம்மாள் (62) என்பவர் அவரது பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் சீனியம்மாள் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

