சங்கரன்கோவில் நகராட்சியில் திமுக நகரமன்ற தலைவி பதவி பறிப்பு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி மொத்தம் 30 வார்டு பகுதிகளை கொண்டதாகும். இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி மீது கடந்த ஜீன் மாதம் 2ம் தேதி திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், SDPI உள்ளிட்ட கட்சிகளை கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நகராட்சி ஆணையர் நாகராஜ்-யிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் இன்று அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 30 கவுன்சிலர்களின் 29 கவுன்சிலர்கள் நகர்மன்ற கூட்டரங்கிற்கு வந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் இது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 29 கவுன்சிலர்களில் 28 பேர் தீர்மானம் மீது வாக்களித்து தீர்மானம் வெற்றி பெற்றது. இதன் மூலம் திமுக நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி தனது பதவி நீக்கம் செய்யப்பட்டார் மேலும் டிசம்பர் 07, 2023 அன்று முதல் முறை சேர்மன் உமா மகேஸ்வரி முதல் முறை கவுன்சிலர் கொண்டு வந்து அமைச்சர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியுற்றது... பின்னர் இரண்டாம் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து 28 கவுன்சிலர்கள் தீர்மானத்தின் வாக்களித்து இன்று பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

