உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு பணி நியமன ஆணை வழங்கல்

உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு பணி நியமன ஆணை வழங்கல்
X
காவலர்களால் உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு பணி நியமன ஆணையினை அமைச்சர் வழங்கினார்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல் விசாரணையின் போது உயிரிழந்த கோயில் தற்காலிக காவலாளர் அஜித் குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. அஜித் குமார் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் வீட்டு மனைக்கான பட்டா, திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி மற்றும் அரசு வேலை வழங்கப்பட்டது. அஜித் குமாரின் தம்பி நவீன் குமார் ஐ.டி.ஐ படிப்பை முடித்துள்ளதால், அவருக்கு ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவல் தொடர்பான நியமன ஆணையை தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி ஆகியோர் நேரில் சென்று நவீன் குமாரிடம் வழங்கினர்
Next Story