போச்சம்பள்ளி அருகே பள்ளி குழந்தைகளுக்கு வழங்கபட்ட பருப்பு சாம்பாரில் பல்லி.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புங்கம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் காலை உணவாக பள்ளிக்கு முதலில் வந்த 4 குழந்தைகள் சாப்பிட்டனர். பின்னர் சாம்பார் ஊற்றும் போது அதில் பல்லி இறந்து கிடைத்தது கண்டு அதிர்ச்சி அடைந்த சமயலர் உடனடியாக பாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர் இதை அறிந்த காவேரிப்பட்டினம் பி டி ஓ மற்றும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர.
Next Story

