உள் வீரராக்கியத்தில் கோவில் வீட்டிற்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.பக்தர்கள் பங்கேற்பு.

உள் வீரராக்கியத்தில் கோவில் வீட்டிற்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.பக்தர்கள் பங்கேற்பு.
உள் வீரராக்கியத்தில் கோவில் வீட்டிற்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.பக்தர்கள் பங்கேற்பு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பால ராஜபுரம் ஊராட்சியில் உள்ள உள்வீரராக்கியத்தில்அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்லாண்டியம்மன் மற்றும் ஸ்ரீ உதிரையாண்டி கோவில் வீட்டை புனரமைத்து இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜையும் , புண்ணியாக வாஜனம், மூர்த்தி மாலா ஹோமம் , வேதிகை அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் பிறகு நாடி சந்தானம் , ஸ்பர்ஹீதி, தீபாதாரணை நடைபெற்றது. தொடர்ந்து யாக வேள்வியில் பூஜைக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்று செல்லாண்டி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் விழா கமிட்டியினர் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கோவில் குடிபாட்டுக்காரர்கள் , ஊர் பொதுமக்கள் , பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
Next Story