சேலத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த வாலிபர் கைது

X
சேலம் அல்லிக்குட்டை ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த கோகுல் (வயது 20) என்பதும், போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story

