விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான அங்கீகாரம்

X
விநாயகா மிஷனின் சேலம் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியானது குரோனிகல்ஸ் ஆப் இந்தியா என்ற தனியார் அமைப்பின் மூலம் சிறந்த கல்லூரிக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற ஒரே அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இது குறித்து கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் கூறியதாவது, குரோனிகல்ஸ் ஆப் இந்தியா என்பது இந்தியாவின் ஒரு முன்னணி தனியார் அமைப்பாகும். இது ஆண்டுதோறும் கல்வித்துறையில் புதுமைகளை புகுத்தி சிறந்து விளங்கும் கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் அங்கீகரித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்த கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதில் சிறந்த வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இந்தாண்டிற்கான தரவரிசை பட்டியலில் எங்கள் கல்லூரியானது ‘ஏ1’ பிரிவில் இந்தியாவின் சிறந்த 50 எலைட் ஸ்டீம் நிறுவன பட்டியலில் இடம்பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற ஒரே ஒரு அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி ‘விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி’ என்பது குறிப்பிடத்தக்கது என்றார். இந்த அங்கீகாரம் கிடைக்க உறுதுணையாகவும், தனது சிறந்த பங்களிப்பினையாற்றி வரும் கல்லூரியின் முதல்வரை பல்கலைக்கழகத்தின் வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா, மற்றும் துறை பேராசிரியர்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்தையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
Next Story

