உடையார்பாளையம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

உடையார்பாளையம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
X
உடையார்பாளையம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அரியலூர், ஜூலை.3- உடையார்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் வேலப்பன் செட்டியார் ஏரி தென்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஶ்ரீ வரதராஜபெருமாள் திருக்கோவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் ஆகிறது.கோயில் ஆனது சிதலமடைந்து புற்கள், கருவேல மரங்கள், புதர்கள் மண்டி கிடந்தது. இந்நிலையில் உடையார்பாளையம் ஆன்மீக ஆலய சீரமைப்பாளர் ஏ.வி.கே.திருநாவுக்கரசு தீவிர முயற்சியாலும் அறங்காவலர் மு.சி.வேம்புநாட்டார், துணை அரங்காவலர் வேம்புபாலமுருகன், மூக்குத்தி வகையறாதாரர்கள், ஆலய நிர்வாக குழு கமிட்டி மற்றும் உடையார்பாளையம் ,எம்/எஸ் பவர் பேக் எலக்ட்ரோ மெக்கானிக்கல் எல்.எல் சி யுனைடெட் அராப் எமிரேட்ஸ் மேனேஜிங் டைரக்டர் பொறியாளர் முத்துசாமி வேம்பு, அனிதா ராணி முத்துசாமி  மற்றும் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்போடும் அனைவரும் ஒன்றிணைந்து கோயில் திருப்பணியானது மூன்று ஆண்டுகளாக மும்முரமாக நடைபெற்று கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக திருவிழாவிற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நவகிரக ஹோமம், கோபூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசால பூஜைகள் நடைபெற்றது. இந்த நிலையில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தேறியது.முன்னதாக கடம் புறப்பாடு மங்கள வாத்தியத்துடன் ஊர்வலமாக கோவிலை வலம் வந்து கருட பகவான் வட்டமிட கோவில் விமான கலசத்திற்கு புனித நீரை பட்டாச்சாரியார்கள் ஊற்றினர். அப்போது கோவிந்தா கோவிந்தா, ராமா ராமா என்ற பக்தி கரகோஷங்களை எழுப்பி பக்தர்கள் பல்வேறு கிராமத்திலிருந்து வந்திருந்த கிராமவாசிகள் வழிபட்டனர். அப்போது ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரதராஜ பெருமாளுக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் சுற்றியுள்ள கிராமவாசிகள் மற்றும் அரியலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story