தீப்பிடித்து எரிந்த செல்போன் கோபுரம்

X
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனை அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடம் உள்ளது. இதன் மூன்றாவது மாடியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரம் சுமார் 50 அடி உயரம் கொண்டது. நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென செல்போன் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மள மள என எரிந்து கோபுரம் முழுவதும் பரவ தொடங்கியது. இது அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கும், மின்வாரிய அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் தீயணைப்பு நிலைய அலுவலகம் சம்பவ இடம் சென்று மின் இணைப்பை துண்டித்து பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயணைத்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி முழுமையாக தீயணைத்தனர்.
Next Story

