திருக்காம்புலியூர்-டூவீலர் மீது டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்தில் வாலிபர் உயிரிழப்பு.
திருக்காம்புலியூர்-டூவீலர் மீது டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்தில் வாலிபர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், காதப்பாறை, ஸ்கந்தன் நகரை சேர்ந்தவர் தண்டபாணி வயது 41. இவர் ஜூன் 30 ஆம் தேதி இரவு 11.50 மணி அளவில் கரூர் - மதுரை பைபாஸ் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். திருக்காம்புலியூர் மேம்பால சர்வீஸ் சாலையில் தவறான வழியில் சென்றபோது, எதிர் திசையில் கரூர் மாவட்டம்,காருடையாம்பாளையம் , ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி வயது 47 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டிப்பர் லாரி , தண்டபாணி ஓட்டிய டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிர் இழந்தார் தண்டபாணி. இந்த சம்பவம் அறிந்த தண்டபாணியின் சகோதரர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் உயிரிழந்த தண்டபாணியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story





