எஸ்.ஐ.க்கு பணி ஓய்வு நாள் விழாடி.எஸ்.பி. பங்கேற்பு

எஸ்.ஐ.க்கு பணி ஓய்வு  நாள் விழாடி.எஸ்.பி. பங்கேற்பு
X
குமாரபாளையத்தில் எஸ்.ஐ.க்கு பணி ஓய்வு நாள் விழா நடந்தது.
குமாரபாளையத்தில் போலீஸ் எஸ்.ஐ. ஆக பணியாற்றி வந்தவர் பழனிச்சாமி. இவர் பணி ஓய்வு பெற்றதையடுத்து, இவருக்கு பாராட்டு விழா இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு டி.எஸ்.பி. சரவணன் பங்கேற்று வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது: நான் சமீபத்தில்தான் இந்த பகுதி டி.எஸ்.பி. ஆக பணியில் சேர்ந்துள்ளேன். பணி ஓய்வு பெறும் பழனிசாமியின் பணி எத்தகையது? என்பது இங்கு பெருமளவில் வந்துள்ள, போலீசார், பொதுநல அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள், விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்யும் தொழிலாளர்கள், கல்வி நிறுவனத்தார் என பலரும் வந்திருப்பதை பார்க்கும் போது, சிறப்பாக பணிபுரிந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. எந்த வேலை சொன்னாலும், முடியாது என்ற சொல் மட்டும் வராது, ஆகட்டும் செய்து விடுகிறேன் என்றுதான் சொல்வார், என அறிந்தேன். அப்படிதான் ஒவ்வொரு போலீசாரும் இருக்க வேண்டும். அப்படி சொன்னால் உயர் அதிகாரிகளுக்கு பாதி வேலை முடிந்த மாதிரி ஆகிவிடும். ஓய்வு காலத்தில் தங்கள் குடும்பத்துடன் சிறந்து வாழ வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார். வந்திருந்த அனைவரும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் கூறினார்கள். எஸ்.ஐ. ராமசாமி, எஸ்.எஸ்.ஐக்கள் மாதேஸ்வரன், வரதராஜ், ராம்குமார், தி.மு.க. முன்னாள் நகர செயலர் செல்வம், பா.ம.க. வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி கார்த்தி, உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story