மக்கள் பிரச்சினைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்து செல்ல மாவட்ட ஆட்சியரை அலைபேசியில் அழைத்தால் அழைப்பை ஏற்பதில்லை என அதிமுக கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் குற

தமிழக அரசு மாவட்ட ஆட்சியருக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என வேண்டுகோள்...
மக்கள் பிரச்சினைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத்து செல்ல மாவட்ட ஆட்சியரை அலைபேசியில் அழைத்தால் அழைப்பை ஏற்பதில்லை என அதிமுக கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் குற்றச்சாட்டு... தமிழக அரசு மாவட்ட ஆட்சியருக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என வேண்டுகோள்... நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களின் பிரச்சனைகள் குறித்தும், வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, கழிப்பிடம், சாலை வசதி, நடைபாதை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் கூடலூர் மக்கள் அவதி அடைந்து வருவதாக அதிமுக கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கூடலூர் பகுதியில் யானைகள் தாக்கி மனித உயிர்கள் பலியாகி வரும் நிலையில் அதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் மக்களின் பிரச்சினைகளை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச் செல்ல மாவட்ட ஆட்சியருக்கு அலைபேசியில் அழைத்தால் மாவட்ட ஆட்சியர் அழைப்பை ஏற்பதில்லை என குற்றம் சாட்டினார். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டால் எவ்வித பதிலும் இதுவரை இல்லை என்றும், சட்டமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்கள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் எவ்வாறு தெரிவிப்பார்கள் என கேள்வி எழுப்பினார். எனவே தமிழக அரசு மாவட்ட ஆட்சியருக்கு உரிய ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பேட்டி: பொன் ஜெயசீலன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர், அதிமுக
Next Story